TNPSC Exam Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

TNPSC Group 4 | இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிபபை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 6244 பணி இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான இந்த தேர்வு மிகுந்த போட்டி நிறைந்ததாக இருக்கும். இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்த தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலையில் இந்தாண்டும் பல லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக  கூறப்படுகிறது. அரசு பணி மீதான மோகம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இந்தாண்டு நடக்க உள்ள தேர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விவரங்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் அவற்றை மார்ச் 4 முதல் மார்ச் 6 ஆம் தேதிக்குள் அதனை செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 15லட்சத்துக்கும் அதிமானோர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது.

தமிழில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  இதில் கட்டாயம் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர்த்து பொதுவான கேள்விகளாக 75 கேள்விகள் இருக்கும், இவை தவிர்த்து ஆப்டிடியூட் எனப்படும் கேள்விகள் 25 இடம்பெறும் , மொத்தமாக 200 கேள்விகள் இடம்பெறும். அதற்கு மொத்தமாக 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாவது அடிப்படையிலான கேள்விகள் இடம்பெற உள்ளன. ஓஎம்ஆர் எனப்படும்  சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது. தேர்வறைகளுக்குள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இதேபோல் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணமாக வெறும் 100 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு கட்டணத்தில் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp