Billionaires | இவர்களில் பலர் கல்வியில் சிறந்து விளங்கினாலும் சிலர் பாதியிலே படிப்பை கைவிட்டுவிட்டனர்.
எலான் மஸ்க் தொடங்கி வாரன் பஃபெட் வரை, உலகின் மாபெரும் பணக்காரர்கள் தங்கள் தொழில்களில் சிறந்து விளங்குகின்றனர். சிறந்த ஆளுமை பன்புடன் கூடிய அவர்கள், உரிய நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு தங்களின் பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்கின்றனர். இவர்களில் பலர் கல்வியில் சிறந்து விளங்கினாலும் சிலர் பாதியிலே படிப்பை கைவிட்டுவிட்டனர்.
எலான் மஸ்க் : பென்சில்வேனியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் இளங்களை பட்டம் பெற்ற இவர், 1997ஆம் ஆண்டு தனது முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆற்றல் இயற்பியலில் பி.எச்.டி சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாளே தொழில் தொடங்கியதால் தனது படிப்பை பாதியிலே கைவிட்டார்.
பெர்னார்ட் அர்னால்ட் : 1971ஆம் ஆண்டு ஃபிரான்சின் தலைச்சிறந்த எகோல் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் மற்றும் கணித பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
ஜெஃப் பெசோஸ் : கணினி அறிவியலில் பொறியியல் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற ஜெஃப் பெசோஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டம் பெற்றார்.
பில் கேட்ஸ் : பில் கேட்ஸ், 1973 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழக்கத்தில் சட்ட படிப்பு மாணவராக இருந்தார். பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்குவதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து விலகுவதற்கு முன்பாக பல்கலைக்கழகத்தின் மிகவும் கடுமையான கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்புகளை முடித்தார்.
மார்க் ஹூர்ரக்பெர்க் : ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் உளவியல் படித்துக்கொண்டிருந்தபோது ஃபேஸ்புக்கை உருவாக்கினார் மார்க் ஹூர்ரக்பெர்க். பின்னர் ஃபேஸ்புக் நிறுவனத்தை முன்னுக்கு கொண்டுவரும் முயற்சியில் கல்லூரி படிப்பை கைவிட்டார்.
வாரன் பஃபெட் : பென்சில்வேனியா வார்டன் ஸ்கூல் பல்கலைக்கழகத்தில் வணிக பாடத்தை தேர்வு செய்த வாரன் பஃபெட், பின்னர் நெப்ராஸ்கா – லிங்கன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் (Business Administration ) இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இதையடுத்து கொலம்பியா வணிக பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.