எந்த ப்ளாட்பார்மில் எந்த ஊர் பேருந்துகள் நிற்கும்? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை விவரம்!

Kilambakkam busstand | கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு எந்த நடைமேடையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற வழிகாட்டியை  அரசு வெளியிட்டுள்ளது.

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்  கடந்தாண்டு டிசம்பரில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையும் என்று பெயரிடப்பட்ட அந்த பேருந்து முனையத்தில் இருந்து தென்மாவட்ட மக்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி கடந்த 24 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை மற்றும் வேலூர், திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தவிர்த்து மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்தது. இந்த சூழலில் 80 விழுக்காடு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு எந்த நடைமேடையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற வழிகாட்டியை  அரசு வெளியிட்டுள்ளது.

நடைமேடை1:

மார்த்தாண்டம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நடை மேடை எண் 1 -இல் இருந்து புறப்படும்.

நடைமேடை 2:

ஸ்ரீவில்லிப்புத்தூர், மார்த்தாண்டம், பாபநாசம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், திசையன்விளை, செங்கோட்டை, சிவகாசி, குலசேகரம், குட்டம், கருங்கல், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நடைமேடை  இரண்டில் பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை3:

வீரசோழன், மதுரை, பொன்னமராவதி, பரமக்குடி, தொண்டி, தேவகோட்டை, சிவகங்கை, சாயல்குடி, கீரமங்கலம், காரைக்குடி, கமுதி, ஒப்பிலன், ஏர்வாடி, ராமேஸ்வரம்

நடைமேடை 4:

மன்னார்குடி, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தேனி, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், கும்பகோணம், குமுளி, கரூர்.

நடைமேடை 5:

வேளாங்கண்ணி, மன்னார்குடி, மயிலாடுதுறை,  பேராவூரணி, பெரம்பலூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், நன்னிலம், துறையூர், திரூவாரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு, அரியலூர்.

நடைமேடை 6:

மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நாமக்கல், திருவாரூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், குருவாயூர், கரூர், எர்ணாகுளம், ஊட்டி, ஈரோடு

நடைமேடை 7:

வந்தவாசி, மேல்மலையனூர், திருவண்ணாமலை, போளூர், செஞ்சி, செங்கம்

நடைமேடை 8:

ஜெயங்கொண்டம், விழுப்புரம், திருக்கோயிலூர், திண்டிவனம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர்.

நடைமேடை 9:

விருத்தாசலம், வடலூர், புதுச்சேரி, நெய்வேலி, திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கடலூர் ஆகிய 9 நடை மேடைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 9 நடைமேடைகளில் எங்கு எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தை கட்டணமில்லாமல் தெரிந்துகொள்ள 149 என்ற எண்ணில் அழைத்து தெரிந்துகொள்ளலாம், இவை தவிர்த்து சிஎம்டிஏவின் சிற்றிடைப் பேருந்துகள் குறித்த விவரங்களுக்கு 7845700557 /    7845727920, பொதுவான சந்தேகங்களுக்கு சிஎம்டிஏ உதவி எண்கள் – 7845740924 / 7845764645 ஆகிய எண்களுக்கு அழைத்து பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளைப்போல வடசென்னை மக்கள் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் தினசரி 160 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெகு சில பேருந்துகளே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp